பெட்ரோல் விலை உயர்வு : உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செயலுத்துங்கள் – கலாய்த்த சன்னி லியோன்

0
10

பெட்ரோல் விலை உயர்வு : உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செயலுத்துங்கள் – கலாய்த்த சன்னி லியோன்

பெட்ரோல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும், பிரபலங்களும் தங்களின் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகள் உயர்ந்த போது, இனிமேல் சைக்கிளில்தான் போக வேண்டும் போல என்று அக்‌ஷய் குமார் சைக்கிள் படத்தை வெளியிட்டார். பெட்ரோல் 100 ரூபாயை கடந்த நிலையில் அவரது சத்தத்தையே காணோம். பதிலுக்கு நடிகை சன்னி லியோன் பங்கமாய் கலாய்த்திருக்கிறார்.

தமிழில் பாலிவுட்டின் ஸ்டார் சன்னி லியோன்  நடிப்பில் இரண்டு படங்கள் தயாராகின்றன. இரண்டும் நாயகி மையப்படங்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் மலையாளத்தில் ஒரு படம் நடித்தார். அத்துடன், சாலையோரம் உணவின்றி சிரமப்பட்ட மும்பைவாசிகளுக்கு சன்னி லியோன் இந்த ஊரடங்கு காலத்தில் உணவளித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். பெட்ரோல் விலையுயர்வு குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.

“கடைசியில் 100 ரூபாயை கடந்த நிலையில், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செயலுத்துங்கள்” என்று சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் போய்விட்டது. பைக், காருக்கெல்லாம் பெட்ரோல் போட்டு கட்டுப்படியாகாது. எல்லோரும் சைக்கிளுக்கு மாறினால் உடல் ஆரோக்கியம் பெறும் என்கிறார் சன்னி லியோன்.