தொலைதூர ட்ரோன்களின் பரிசோதனைகளை மேற்கொள்ள 20 நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி

0
9

தொலைதூர ட்ரோன்களின் பரிசோதனைகளை மேற்கொள்ள 20 நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி

PIB Chennai: வெகு உயரத்தில் பறக்கும்  ட்ரோன்களின் பரிசோதனைகளுக்கு, 20 நிறுவனங்களுக்கு, ஆளில்லா விமான (யுஏஎஸ்) விதிமுறைகளில் இருந்து நிபந்தனையுடன் கூடிய அனுமதியை, விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

தொலைதூர ட்ரோன்களின் செயல்பாடுகள் தொடர்பான, ஆளில்லா விமானங்களின் விதிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில், இந்த ஆரம்பகட்ட அனுமதி கருதப்படுகிறது.

இந்த தொலைதூர பரிசோதனைகள், எதிர்காலத்தில் ட்ரோன்களின் டெலிவரிகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் இதர முக்கிய பயன்பாடுகளின் கட்டமைப்பை உருவாக்க  உதவும்.

இந்த தொலைதூர ட்ரோன்களின் பரிசோதனைகளை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்களின் விண்ணப்பங்களை வரவேற்க, தொலைதூர பரிசோதனை மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு(பீம்) குழுவை மத்திய அரசு உருவாக்கியது.

இதற்கான  விருப்ப மனு அறிவிப்பை (27046/70/2019 -AED-DGCA) விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம்  2019 மே 13ம் தேதி வெளியிட்டது. பீம் குழு 34 விருப்ப மனுக்களை ஆய்வு செய்து, தொலை தூர ட்ரோன் பரிசோதனை மேற்கொள்ள 20 நிறுவனங்களை தேர்வு செய்தது.

இந்த அனுமதி, விருப்ப மனு அறிவிப்பில் கூறப்பட்ட தேவைகள், பீம் குழு பிறப்பித்த அல்லது பிறப்பிக்கும் உத்தரவுகள்/விலக்குகள் ஆகியவற்றை  முழுமையாக பின்பற்றுவதற்கு உட்பட்டவையாகும்.  இந்த நிபந்தனையுடன் கூடிய  அனுமதி ஓராண்டு அல்லது அடுத்த உத்தரவுகள் பிறப்பிக்கும் வரை இதில் எது முன்பாகவோ அதுவரை செல்லுபடியாகும்.

தொலைதூர ட்ரோன்களின் பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலை கீழ்கண்ட இணைப்பில் காணவும்: