தனியார் கோவிட் கேர் சென்டர் தொடங்க அனுமதி – சென்னை மாநகராட்சி ஆணையர்

0
7

சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் தனியார் கோவிட் கேர் சென்டர் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் கொரோனா சிகிச்சை மையம் தொடங்க மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அனுமதி வழங்கியுள்ளார். கோவிட் கேர் சென் டர் தொடங்க தனியார் ஹோட்டல், மருத்துவமனை, அசோசியேஷன் உள்ளிட்டவை அனுமதி பெறலாம் என தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தயாராகி வரும் கோவிட் கேர் மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார். ஏற்கெனவே சென்னை மாநகராட்சி சார்பில் 12 கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர 13 வது சிகிச்சை மையமும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் தனியார் கொரோனா சிகிச்சை மையம் தொடங்க மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அனுமதி வழங்கியுள்ளார். மாநகராட்சியிடம் தெரிவித்துவிட்டு முறைப்படி மையம் தொடங்கலாம்.