சோனு சூட்டின் அலைபேசிக்கு கொரோனா பாதிப்பு உதவிக்கேட்டு குவியும் மெசேஜ்கள்!

0
6

சோனு சூட்டின் அலைபேசிக்கு கொரோனா பாதிப்பு உதவிக்கேட்டு குவியும் மெசேஜ்கள்!

சோனு சூட் என்ற வில்லன் நடிகரை ரியல் ஹீரோவாக காட்டியது, கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர் செய்த பேருதவிகள். இப்போதுவரை, தனது சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் என்று தனது கரங்களை நீட்டி வருகிறார். இதனால், சோனு சூட்டுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பலர் உதவி கேட்டு கோரிக்கை வைக்கிறார்கள். உதவுவதற்காகவே சோனு சூட் தனி செல்ஃபோன் நம்பரையும் ஆப்பையும் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சோனு சூட் தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்த சமயத்தில் அவரது செல்போனுக்கு உதவிகள் கேட்டு மெசேஜ்களாக குவிந்துள்ளன. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ள சோனு சூட் “உதவிக் கேட்டவர்களை தொடர்புகொள்ள முடிந்தவரை முயற்சிக்கிறோம். தாமதம் ஏற்பட்டால் மன்னியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.