கொல்கத்தா அணியில் வீரர்களுக்கு கொரோனா… இன்றைய ஐபிஎல் ஆட்டம் ஒத்திவைப்பு?

0
7

கொல்கத்தா அணியில் வீரர்களுக்கு கொரோனா… இன்றைய ஐபிஎல் ஆட்டம் ஒத்திவைப்பு?

கொல்கத்தா அணியில் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இன்று நடக்க இருந்த கொல்கத்தா – பெங்களூரு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். இதையும் மீறி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று நடைபெற இருந்த கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.