கொரோனா தடுப்பூசிக்கு 50 லட்சம் பேர் பதிவு : 2 லட்சத்து 8 ஆயிரத்து 791 பேருக்கு இதுவரை முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது

கொரோனா தடுப்பூசிக்கு 50 லட்சம் பேர் பதிவு : 2 லட்சத்து 8 ஆயிரத்து 791 பேருக்கு இதுவரை முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது

புதுடெல்லி: 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதி, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது.

இதுவரை சுமார் 50 லட்சம்பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது. அதுபோல், இந்த பிரிவினரில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 791 பேருக்கு இதுவரை முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறியது.