‘கூ’ நுண் வலைப்பதிவு, தமிழ் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

0
13

‘கூ’ நுண் வலைப்பதிவு, தமிழ் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

‘கூ’ நுண் வலைப்பதிவு, தமிழ் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் துறையை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இணைந்து வருகின்ற்னர். 90களின்சினிமா உலகிலும், தமிழக அரசியலிலும் தனக்கானஅடை யாளத்தை உருவாக்கி, தமிழக மக்கள் வீடுகளில் ஒருவராக கருதப்படும் விஜயகாந்தின்பிறந்த நாளை ’கூ’ தமிழ் பயனர்கள்இன்று ஒன்றுகூடி கொண்டாடி வருகின்றனர். அவர் பிறந்த நாள் அன்று காலை முதல் ‘கூ’ஆப்பில்#CaptainVijaykanth எனும் ஹே ஷ்டே க்முதல் இடத்தில் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது.

இந்தியாவின்மிகப் பெரிய நுண்வலைப்பதிவு தளமான’கூ’, சமீபத்தில் தமிழ் பயனர்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. சமீபத்தில், இயக்குனர் சேரன், பிக்பாஸ் முகன் ராவ், தமிழிசைசௌந்தரராஜன், எஸ்.வி.சேகர்ப போன்ற பலமுக்கிய பிரமுகர்கள் கூவில் இணை ந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு பிரீமியர்லீக் அமைப்புடன் இணைந்து, கிரிக்கெ ட் பிரியர்களுக்கு உடனுக்குடன் தகவல்களை வழங்கியத தோடு பல போட்டிகள் தொடர்பாக பல சுவாரஸ்யமான பதிவுகள், கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டது. இவ்வாறு தமிழ் பார்வையாளர்களுக்கு உயர்தர நிகழ்ச்சி அனுபவத்தைஅளிப்பதில் ’கூ’ அதிக கவனம் செலுத்துகிறது. கேப்டனின் விஜயகாந்தின் பிறந்தநாளானஇன்றைய முக்கியமான தருணத்தில், கேப்டனுக்கு ’கூ’ செயலியில் வாழ்த்துக்கள்.