கடன் வாங்கியதில் பிரச்சினை:  நடிகர் விஷால் – தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரிக்கு போலீசார் சம்மன்

0
1

கடன் வாங்கியதில் பிரச்சினை:  நடிகர் விஷாலுக்கும், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரிக்கும் போலீசார் சம்மன்

வாங்கிய கடனை செலுத்திய பிறகும் உறுதிமொழி பத்திரங்களைத் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது தி.நகர் துணை ஆணையரிடம் விஷால் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் விஷாலின் உதவியாளர் ஹரி, விசாரணைக்காக ஆஜரானார். அவர் புகார் தொடர்பான ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

போலீசார் சம்மன்

இதையடுத்து, விஷால் கொடுத்த புகார் மனு மீது கோடம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விஷாலுக்கும், ஆர்.பி.சவுத்திரிக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. அந்த சம்மனில், விசாரணைக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரிடமும் விசாரணை நடத்திவிட்டு அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்