ஆவின் பால் விற்பனை: குறைக்கப்பட்ட விலைப்பட்டியல் வெளியீடு

0
254

ஆவின் பால் விற்பனை: குறைக்கப்பட்ட விலைப்பட்டியல் வெளியீடு

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மே.07 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வரானவுடன் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்.

அதில் இரண்டாதவதாக பொது மக்கள் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.05.2021
முதல் குறைத்து விற்பனை செய்ய அரசாணை பிறப்பித்தார்.

குறைக்கப்பட்ட விலையின் அடிப்படையில் ஆவின் நிறுவனம் மூலம் விற்கப்படும் பல்வேறு வகை பால்களின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம் பின்வருமாறு:

இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் நேரடியாக 16.05.2021 முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து பெற்றுக்கொள்ளலாம்.

கீழ்கண்ட விலை பட்டியல் 16.05.2021 முதல் அமலுக்கு வருகின்றது.

பால் அட்டை விற்பனை:-

சென்னையில் பிரதி மாதம் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பால் அட்டை 27 வட்டார அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு உண்டான பால் அட்டைதாரருக்கு 16 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை வழங்கப்படும். எனவே நுகர்வோர்களுக்கு இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள பால் அட்டைகளுக்கு உண்டான வித்தியாச தொகை அடுத்த மாதம் பால் அட்டை விற்பனை செய்யும் போது ஈடு செய்யப்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.