
அப்போலோ மருத்துவமனை வலிப்பு நோயின் சுழற்சியை தகர்த்தெறிய புதிய சிகிச்சை : வலிப்பு நோய்க்கான அதிநவீன அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்துகிறது!
சென்னை, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை [Apollo Hospitals Chennai] மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு வலிப்பு நோயை [epilepsy] குணப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை முறையை [Epilepsy Surgery Program] அறிமுகப்படுத்தியுள்ளது. இது விரிவான நரம்பியல் பராமரிப்புக்கான அப்போலோ மருத்துவமனையின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இந்த முயற்சி அப்போலோவின் விரிவான மருத்துவ நிபுணத்துவம், வலிப்பு மேலாண்மை ஆகியவற்றுடன் அதிநவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது. மருத்துவ உயர் சிறப்புத் தன்மைக்கான அப்போலோ மருத்துவமனையின் விரிவான அர்ப்பணிப்பையும் சுகாதாரப் பராமரிப்பில் புதுமையையும் இந்தப் புதிய அறுவை சிகிச்சைத் திட்டம் எடுத்துக்காட்டுகிறது.
இந்த வலிப்பு நோய் (Epilepsy) அறுவை சிகிச்சைத் திட்டம் அப்போலோ பிரதான மருத்துவமனையிலும் [Apollo Main Hospital] அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் [Apollo Proton Cancer Centre] ஒருங்கிணைந்த வளங்கள் மூலமும் செயல்படுத்தப்படுகிறது. இது அதிநவீன நோயறிதல், நவீன அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள் கிடைத்தல் ஆகியவற்றை உறுதி செய்கிறது. இந்த மையங்கள், 3டி எம்ஆர்ஐ (3T MRI), சவுண்ட் ப்ரூஃப்ட் வீடியோ இஇஜி சூட் (sound proofed video EEG suite), பிஇடி சிடி (PET CT) ஸ்கேன் ஆகிய அதிநவீன மருத்துவ வசதிகளைக் கொண்டுள்ளன. இது துல்லியமான அறுவை சிகிச்சைக்கு முந்தைய மதிப்பீட்டை எளிதாக்குகிறது. இந்த சிகிச்சைத் திட்டம் மேம்பட்ட துல்லியத்தன்மை நரம்பியல் கண்காணிப்பு, உள்நோக்கிய அல்ட்ராசவுண்ட், உள்நோக்கிய எலக்ட்ரோகார்டிகோகிராபி, உயர் துல்லிய செயல்பாட்டு நுண்ணோக்கி (augmented reality-enabled neuro navigation, intraoperative ultrasound, intraoperative electrocorticography, high-precision operative microscope) ஆகியவற்றை உள்ளடக்கியது. இது வலிப்பு நோய்ச் சிகிச்சையில் மிகவும் துல்லியமாக சிகிச்சை அளிப்பதை உறுதி செய்கிறது.
வலிப்பு மேலாண்மையில் சிறப்பு பயிற்சி பெற்ற மூத்த மருத்துவரும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் அரவிந்த் சுகுமாரன், மூத்த நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் முத்துக்கனி உள்ளிட்ட புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் குழுவால் இந்த சிகிச்சைத் திட்டம் வழிநடத்தப்படுகிறது. இந்த சிகிச்சைத் திட்டத்தில் வலிப்பு நோய்க்கு இதுவரை 15 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இன்ட்ரா ஆபரேடிவ் EEG அல்லது எலக்ட்ரோகார்டிகோகிராஃபி (intra operative EEG or electrocorticography) அறுவை சிகிச்சையின் துல்லியத்தை மேம்படுத்துகிறது. இந்த நிகழ்வுகளில், 13 நோயாளிகள் முழுமையாக வலிப்பு நோயில் இருந்து குணம் அடைந்து மீண்டுள்ளனர். இது வலிப்பு சிகிச்சையில் அப்போலோ மருத்துவமனையின் பல்துறை அணுகுமுறை செயல்திறனை எடுத்துக் காட்டுகிறது.
இந்த சிகிச்சைத் திட்டத்தை தொடங்கி வைத்து, அப்போலோ மருத்துவமனையின் மூத்த மருத்துவரும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் அரவிந்த் சுகுமாரன் [Dr. Arvind Sukumaran, Senior Consultant Neurosurgeon, Apollo Hospitals] கூறுகையில், “சென்னை அப்போலோ மருத்துவமனையில் வலிப்பு நோய்க்கான அறுவை சிகிச்சையில் பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க நவீன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது மருந்து எதிர்ப்பு வலிப்பு நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்து வருகிறது. இந்த ஒருங்கிணைந்த அதிநவீன தொழில்நுட்பம், பல்துறை அணுகுமுறை ஆகியவற்றின் மூலம், அப்போலோ மருத்துவமனை இப்போது வலிப்பு நோயில் இருந்து முற்றிலும் குணம் அடைவற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக் கூடிய வகையில் மிகவும் துல்லியமான சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்கிறது. இந்த சிகிச்சைத் திட்டம் இந்தியாவில் வலிப்பு நோயை திறம்பட கையாள்வதில் அடுத்தக்கட்ட முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.” என்றார்.
அப்போலோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் முத்துக்கனி [Dr. Muthukani, Senior Consultant Neurologist, Apollo Hospitals] கூறுகையில், “இந்தியாவில் ஏராளமான எண்ணிக்கையிலான வலிப்பு நோயாளிகள் உகந்த மருத்துவ சிகிச்சை இருந்தபோதிலும் வலிப்பு நோய்த் தாக்கங்களுடன் தொடர்ந்து போராடுகிறார்கள். எங்கள் மேம்பட்ட அறுவை சிகிச்சைத் திட்டம் இந்த நோய்க்குப் பொருத்தமான, உறுதியான தீர்வை வழங்குகிறது. இது வலிப்பு நோயின் தாக்கம் இல்லாத வாழ்க்கையை வழங்குகிறது. அப்போலோ மருத்துவமனை எப்போதும் ஒரு முழுமையான அணுகுமுறையை பின்பற்றி, அதிநவீன சிகிச்சையை உறுதி செய்வதிலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பின்பற்றுவதிலும் முன்னோடியாக உள்ளது. இந்தியா முழுவதும் நரம்பியல் சிகிச்சையையும் நோயாளிகள் குணம் அடையும் விகிதத்தையும் மேம்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார்.
நிம்ஹான்ஸ் [NIMHANS], அமிர்தா இன்ஸ்டிடியூட் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் அப்போலோ மருத்துவமனை [Amrita Institute] உத்திசார் ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அப்போலோ-வின் நோயறிதல் நடைமுறையையும் சிகிச்சை திறன்களையும் மேலும் சிறப்பானதாக மேம்படுத்தியுள்ளது. இந்த கூட்டு செயல்பாடுகள் அனைத்து அம்சங்களிலும் மேம்பட்ட முழுமையான சிகிச்சை, ஆராய்ச்சியை அடிப்படையாக கொண்ட நோய் பராமரிப்பு, நோயாளிகளை மையமாகக் கொண்ட சிகிச்சைப் பராமரிப்பு என முழுமையான மருத்துவ அணுகுமுறையை வழங்குவதற்கான அப்போலோவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றன.
குறிப்பிடத்தக்க மருத்துவ முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், வலிப்புக்கான அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் நகர்ப்புறங்களில் கூட குறைவாகவே உள்ளது. நாடு முழுவதும் வலிப்பால் பாதிக்கப்பட்ட 50 லட்சம் நபர்களில், கிட்டத்தட்ட 25 சதவீதம் பேர் அறுவை சிகிச்சை முறையால் பயன் அடையக்கூடும். இந்த நோயாளிகளில் ஏறக்குறைய பாதி பேர் முழுமையாக வலிப்புத்தாக்கத்தில் இருந்து விடுபட்டு குணம் அடையும் திறனைக் கொண்டுள்ளனர். சரியான நேரத்தில் சிகிச்சை முக்கியமானது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்வது, குழந்தைகளிடையே அறிவுத் திறன் செயல்பாடுகளை மேம்படுத்தும். பெரியவர்களிடையே மருந்து சார்புநிலையைக் குறைக்கும். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் கணிசமாக மேம்படும் என்பவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.
பொதுவாகப் பார்க்கையில், அப்போலோ மருத்துவமனை, அதன் வலிப்பு நோய் சிகிச்சைத் திட்டத்தை, ரோபோடிக் ஸ்டீரியோடாக்டிக் இஇஜி [robotic stereotactic EEG]-யை அறிமுகப்படுத்துவதன் மூலம் மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. நரம்பியல் நோய் சிகிச்சையிலும் மருத்துவ புதுமை கண்டுபிடிப்புகளிலும் அப்போலோ மருத்துவமனை முன்னோடியாகத் திகழ்வதுடன், மருத்துவ சிகிச்சைகளில் அதன் தலைமைத்துவ இடத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. புதிதாக தொடங்கப்பட்ட இந்த வலிப்பு நோய் சிகிச்சைத் திட்டத்தின் மூலம், அப்போலோ மருத்துவமனை, நோயாளிகள் பராமரிப்பு, மருத்துவ ஆராய்ச்சி, சுகாதாரக் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் மேலும் பல முன்னோடி முன்னேற்றங்களை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளது.