அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்

0
105

அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் குடிமக்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றது. இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவில்லை. எனவே, கடந்த ஆண்டு (2020) மற்றும் இந்த ஆண்டுக்கான விருதுகள் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 27,-ஆம் தேதி பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். வீர் சக்ரா விருதை, அபிநந்தன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.