200 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக சுற்றுலா மையம்! : அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் மேயர் பிரியா, சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், சுற்றுலாத் துறைக்கு மற்ற துறைகள் அளிக்கும் பங்கு உள்ளிட்டவை குறித்து சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டன.
200 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக சுற்றுலா மையம்! : அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!
அப்போது பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சுற்றுலாத்துறையில் ஆன்மீக சுற்றுலா மிகவும் முக்கியமான ஒன்று. கோயில்களில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பொக்கிசங்களை பாதுகாப்பதில் இந்து அறநிலையத்துறை மட்டும் அல்லாது சுற்றுலாத்துறைக்கும் பெரும் பங்கு உண்டு. அந்தவகையில் இந்து சமய அறநிலைத்துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து செயல்படும்.
சென்னையை அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள திருவிடந்தை திருகோவிலுக்கு சொந்தமான இடத்தில் 200 ஏக்கர் பரப்பளவிற்கு இந்துசமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறையின் முயற்சியில் ஆன்மிக சுற்றுலா மையம் அமையவுள்ளது” என தெரிவித்துள்ளார்.