வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

0
380

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் திருக்கோவில் வெகு விமர்சையாக சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி,பூதேவி சமேத வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். 108 திவ்ய தேசங்களில் 59 வது திவ்யதேசமான திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வைத்திய வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார்.சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்துவிடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க இந்தாண்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்களின்றி சொர்க்கவாசலம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிநடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோயில், பக்த ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அதிகாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை,திருக்கோடி ஏற்றுதல் மற்றும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா வக்கீல் செல்வகுமார் அன்னதானம் வழங்குதல் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரங்கசாமி, செயல் அலுவலர் முருகன் ஆகியோர் முன்னின்று செய்தனர்.

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு குளித்தலையில் உள்ள அருள்மிகு நீலமேகப்பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. இதையொட்டி, இக்கோவிலில் உள்ள மூவலர் மற்றும் உற்சவருக்கு சிறப்பூஜைகள் மற்றும் முத்தங்கிசேவை அலங்காரம் செய்யப்பட்டது. அதுபோல இந்த கோவிலிலுள்ள அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து நகாலை 5 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. முதலில் உற்சவ பெருமாள் பரமபத வாசல் வழியாக சென்ற பின்னர், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றனர். பக்தர்கள் வழிபட்டு செல்லும் வகையில் இக்கோவிலின் உற்சவ பெருமாள் தனியான மண்டபத்தில் வைக்கப்பட்டார். அரசு விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் முககவசம் அணிந்து நீண்டவரிசையில் ஒருவர் பின் ஒருவராக நின்று சாமிதரிசனம் செய்தனர். மேலும் தாங்கள் கொண்டுவந்த துளசி, தேங்காய், வாழைப்பழங்கள் கொண்டு சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகில் வடக்கு புதுப்பாளையம், கொளாநல்லி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

வடக்குப் புதுப்பாளையம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நேற்று முன்தினம் (12.01.22) இரவு எட்டு மணிக்கு உற்சவ மூர்த்தி மண்டப எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு முழுவதும் பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து காலை (13, 02. 22) ஐந்தே முக்கால் மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க் வாசல் திறக்கப்பட்டு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் எழுந்தருளினார்.இந்நிகழ்ச்சிக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை காலை எட்டு மணிக்கு மேல் பக்தர்கள் வழிபடுவதற்காக அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கொளாந ல்லி ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலிலும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.காலை எட்டு மணிக்கு மேல் பக்தர்கள் வழிபாடு செய்திட அனுமதிக்க பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் பகுதியில் உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் காலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. இந் நிகழ்வில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நின்ற கலந்துகொண்டு வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர். மேலும் இன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு கருர் மாவட்டம் குளித்தலையில் உள்ள அருள்மிகு நீலமேகப்பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, இக்கோவிலில் உள்ள மூவலர் மற்றும் உற்சவருக்கு சிறப்பூஜைகள் மற்றும் முத்தங்கிசேவை அலங்காரம் செய்யப்பட்டது. அதுபோல இந்த கோவிலிலுள்ள அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து நேற்று காலை 5 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. முதலில் உற்சவ பெருமாள் பரமபத வாசல் வழியாக சென்ற பின்னர், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றனர். பக்தர்கள் வழிபட்டு செல்லும் வகையில் இக்கோவிலின் உற்சவ பெருமாள் தனியான மண்டபத்தில் வைக்கப்பட்டார். அரசு விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் முககவசம் அணிந்து நீண்டவரிசையில் ஒருவர் பின் ஒருவராக நின்று சாமிதரிசனம் செய்தனர். மேலும் தாங்கள் கொண்டுவந்த துளசி, தேங்காய், வாழைப்பழங்கள் கொண்டு சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

கள்ள்குறிச்சி சங்கராபுரம் மணிநதி அருகே உள்ள அலமேலு மங்கா சமேத வெங்கடேசபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

முன்னதாக வெங்கடேச பெருமாளுக்கு பால்,தயிர்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்தி கோவிலை சுற்றி வலம் வரப்பட்டது. இதேபோன்று தேவபாண்டலம் சவுந்தரவல்லி தாயார் சமேத பார்த்தசாரதி பெருமாள்கோவில் மற்றும் சங்கராபுரம் பகுதி பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது/

கள்ளக் குறிச்சி திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் காலை ஐந்து முப்பது மணி அளவில் கோவிலில் ஜீயர் சாமிகள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறப்பு விழா பக்த கோஷங்கள் முழங்க நடைபெற்றது. அப்போது மேளதாளங்கள் முழங்க பெருமாள் சாமி சொர்க்கவாசல் மண்டபத்திற்குள் வந்தார்.

அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகளும் அர்ச்சனைகளும் நடைபெற்றது. ஆனால் கொரோனோ வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழக அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடுகளை ஒட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. சரியாக 6 மணிக்கு மேல் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதித்தனர்.
உலகளந்த பெருமாள் கோவிலில் பக்தர்கள் யாரும் இன்றி சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது பக்தர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று சாமி கும்பிட்டு வருகின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமி முன்னிலையில் விழாக் குழுவினர்கள் உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.