விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்; கோயில்களில் திரண்ட பக்தர்கள்

0
200

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்; கோயில்களில் திரண்ட பக்தர்கள்

தேனி -விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.தேனி பெரியகுளம் ரோடு பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சிறப்பு யாகத்துடன் பூஜைகள் துவங்கியது. 1008 லிட்டர் பாலில் விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. பன்னீர், அரிசி மாவு, சந்தனம், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். நேரு சிலை அருகில் உள்ள செல்வ விநாயகர் கோயில், கணேச கந்த பெருமாள் கோயில், வெற்றி கொம்பன் கோயில், அல்லிநகரம் விநாயகர் கோயில்களில் ் சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், அன்னதானமும் நடந்தது.நகரின் பல இடங்களில் ஹிந்து முன்னணி, ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடந்தது.போடி புதூர் சங்கரவிநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. கவுரவ தலைவர் வடமலைய ராஜையபாண்டியன் தலைமை வகித்தார். சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலித்தார். பொங்கல் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.போடி அரசமரத்து விநாயகர் கோயில், குலாலர் பாளையம் விநாயகர் கோயில். போடி அணைப்பிள்ளையார் கோயில், சந்தைப்பேட்டை விநாயகர் கோயில், அக்ரஹாரா விநாயகர், அமராவதி நகர் விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. பொங்கல் இட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.போடி நகர இந்து முன்னணி, பா.ஜ., சார்பில் மெயின் ரோடு, வீடுகள் தோறும் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர்.

பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்
பெரியகுளம் வரசித்தி விநாயகர் கோவிலில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குருவப்பபிள்ளையார், சங்கவிநாயகர் கோயிலில் கொழுக்கட்டை வைத்து சிறப்பு பூஜை நடந்தது.பஞ்சமூர்த்தி விநாயகர்: வடுகபட்டியில் பஞ்சமூர்த்தி விநாயகர் கோயிலில் சித்தி கணபதி கையில் தேசிய கொடியும் தாமரை மலர் இடம் பெற்றுள்ளது, மற்றும் உச்சிஸ்ட்ட கணபதி, தாமரைக்குளம் லட்சுமிபுரம் ,தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, கைலாசபட்டி, மேல்மங்கலம் ஜெயமங்கலம் உட்பட தாலுகா முழுவதும் கோயிலில்கள், வீடுகள், அலுவலகம், வணிக நிறுவனங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை நடந்தது.-மூணாறில் உள்ள காளியம்மன் நவகிரக கிருஷ்ணன் கோயிலில் 1008 தேங்காய்களை பயன்படுத்து கணபதி ஹோமம் நடந்தது. அதன்பிறகு கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன.நகரில் மகாத்மா காந்தி சிலை அருகே ஆட்டோ டிரைவர்கள் சார்பில் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் நடந்து வருகின்றன. அதேபோல் சுற்றுலா கார் டிரைவர்கள் சார்பில் விநாயகர் சிலை வைத்து பூஜை நடந்து வருகின்றன.யானை ஊட்டு: மூணாறு அருகே தேவிகுளத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்ட் கட்டுப்பாட்டில் தர்மா சாஸ்தா எனும் அய்யப்பன் கோயில் உள்ளது. அங்கு விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடந்தது. அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு யானை ஊட்டு எனும் யானைக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதற்கு திருச்சூரில் இருந்து புத்தூர் மகேஸ்வரன் என்ற ஆண் யானை கொண்டு வரப்பட்டு உணவு வழங்கப்பட்டது. கோயிலில் மேல்சாந்தி ரமேஷ்சாந்தி தலைமையில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன. மாலையில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறைச்சல்பாறை அருகில் உள்ள ஆற்றில் கரைக்கப்பட்டது.