குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்

0
179

குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்

சென்னை அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. இதற்காக ரூ.2 கோடி மதிப்பில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் கடந்த இரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில், கோவில் கோபுரங்கள், கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 20 ஆம் தேதி இதற்காக யாக சாலைகள், அலங்காரங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த் கும்பாபிஷேக விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.