வெளிமாநில கோயில்களுக்கு மீனாட்சி அம்மன் கோயில் பட்டு வஸ்திரம்!
மதுரை : உ.பி., காசி விஸ்வநாதர் கோயில், ஆந்திரா சித்தூார் காளஹஸ்தி கோயில், கேரளா திருச்சூர் வடக்குந்நாதர் கோயில், கர்நாடகா முருதீஸ்வரா கோயில் உட்பட வெளிமாநில கோயில் திருவிழாக்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் அனுப்பப்பட உள்ளன.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் போது ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியன்று ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் சார்பில் மாலை அணிவிக்கப்படுகிறது. அதேபோல் ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் மாலை அனுப்பப்படுகிறது. பாரம்பரியமாக நடந்து வரும் இந்நிகழ்வை போன்று, வருங்காலத்தில் வெளிமாநில கோயில்களுடன் நல்லுறவு ஏற்படுத்த அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். இதன்படி மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் காசி, காளஹஸ்தி, திருச்சூர் கோயில்களுக்கு பட்டு வஸ்திரம் வழங்கவும், அதற்கு பதிலாக அந்த கோயில்கள் சார்பில் பட்டு வஸ்திரம், மாலை வழங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முதற்கட்டமாக காளஹஸ்தி, திருச்சூர் கோயில் நிர்வாகத்திடம் மீனாட்சி கோயில் நிர்வாகிகள் பேசி உள்ளனர். அதேபோல் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், கோயிலில் இருந்து பட்டு
குருவாயூர் கோயில் உட்பட வெளிமாநில கோயில்களுக்கு ஸ்ரீரங்கம் வஸ்திரம், மாலை அனுப்பப்பட உள்ளது. இதன்மூலம் வெளிமாநிலங்களுக்கு இடையே ஒரு இணக்கமான நல்லுறவு ஏற்படும் என அறநிலையத்துறை கருதுகிறது.