முரசொலி பவளவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – உலகநாயகன் கமலஹாசன்

0
463

முரசொலி பவளவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – உலகநாயகன் கமலஹாசன் 

சென்னை, சென்னையில் முரசொலி பவளவிழா கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முரசொலி செல்வம், நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இதில் முன்னணி பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, உள்ளிட்டோரும் முரசொலி விழாவில் பேசுகின்றனர். விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், உலகநாயகன் கமலஹாசனுக்கும் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார்.

முரசொலி பவள விழா மேடையில் ஏறாமல் பார்வையாளராக கிழே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முரசொலி பவளவிழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை. சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன. தமக்கு அன்பெனும் அமுதம் ஊட்டி ஆதரவு கரம் நீட்டிய தமிழ் பெருமக்களுக்கு நன்றி. என் கடன் பணி செய்து கிடப்பதே. அரசியலுக்கு அப்பாற்பட்டு முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.