நஷ்டத்தை விஜய் ஆண்டனி – பாத்திமா இருவரும் திருப்பித் தர வேண்டும்: அண்ணாதுரை விநியோகஸ்தர்கள் நெருக்கடி?

0
3125

நஷ்டத்தை விஜய் ஆண்டனி – பாத்திமா இருவரும் திருப்பித் தர வேண்டும்: அண்ணாதுரை விநியோகஸ்தர்கள் நெருக்கடி?

ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் ‘அண்ணாதுரை நவம்பர் 30 அன்று ரிலீஸ் ஆனது.

இவர்நடிப்பில் நான் (2012) சலீம் (2014) இந்தியா பாகிஸ்தான், பிச்சைகாரன் (2015) எமன், சைத்தான் (2016) வெளியானஇப்படங்களில் பிச்சைகாரன் தமிழ் , தெலுங்கில் மிகப் பெரும் வெற்றி பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் வியாபார முக்கியத்துவம் உள்ள நாயகனாக ஆனார் விஜய் ஆண்டனி.

பிச்சைக்காரன் படத்திற்கு பின் வெளிவந்த எமன், சைத்தான் இரு படங்களும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் நஷ்டத்தை ஏற்படுத்தின. அண்ணாத்துரைபடத்தின் தமிழக உரிமையை 6.50 கோடிக்கு அலெக்சாண்டர் வாங்கினார்.

முந்தைய படங்கள் பிளாப் ஆகி இருந்தாலும் அண்ணாதுரை படம் பிரமாதமாக வந்திருப்பதாக விஜய் ஆண்டனியும், அவரது மனைவி பாத்திமா இருவரும் கூறியதை அலெக்சாண்டர் நம்பினார்.

இருப்பினும் படம் பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார்.படம் வெளியாவதற்கு இரு தினங்களுக்கு முன் படத்தை பார்த்த அலெக்சாண்டர் தரப்பு விலை அதிகம், படத்தை சுருட்டி கொடுத்துள்ளீர்கள் என கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனி தரப்பு இனி ஒன்றும் செய்ய முடியாது ரீலீஸ் செய்யுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். 350க்கும் அதிகமான தியேட்டர்கள் போட்டு முடித்திருந்த நிலையில் பின் வாங்க முடியாத அலெக்சாண்டர் தரப்பு படத்தை வெளியிட்டனர்.

ஓபனிங் இல்லை மூன்று இலக்க எண்ணிக்கையில் டிக்கட் விற்பனை ஆவதே போராட்டமாக மாறியது. கடந்த நான்கு நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 2 கோடி அளவிலேயே மொத்த வசூல் செய்துள்ள இப்படம் 70% நஷ்த்தை ஏற்படுத்தும் என்பதால் விநியோகஸ்தர் தரப்பு விஜய் ஆண்டனிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளது.

இவர் நடிப்பில் வெளியான சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களை தயாரித்தவர் கீரீன் ஸ்டுடியோ சரவணன் இப்படங்களால் ஏற்பட்ட நஷ்டடத்தால் படத்தயாரிப்பிலிருந்தே ஒதுங்கி விட்டார்.

அண்ணாதுரை தமிழ் நாட்டில் மட்டுமல்ல கேரளா, ( 20 லட்சம் ) ஆந்திரா (2.50 கோடி) விலைக்கு வாங்கியவர்களுக்கு 80% நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறுகின்றனர்.

விஜய் ஆண்டனி இதுவரை ஆறு படங்களில் நடித்துள்ளார் இதன் மூலம் பெரும் பயனடைந் வர் விஜய் ஆண்டனி மட்டுமே. இவர் நடித்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்கியதால் ராதிகா சரத்குமார் Rஸ்டுடியோ பேனரில் விஐய் ஆண்டனி தரப்பு தயாரித்த படம் தான் அண்ணாதுரை.

இந்த படத்தின் தயாரிப்பு, வியாபாரம் என அனைத்து விஷயங்களையும் பாத்திமாவே நேரடியாக நிர்வகித்தார். அண்ணாதுரை படம் மூலம் ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை விஜய் ஆண்டனி – பாத்திமா இருவரும் திருப்பித் தர வேண்டும் இல்லாத பட்சத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்னாடகா உரிமை வாங்கியவர்கள் ஒன்று சேர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட போவதாக கூறுகிறது விநியோக வட்டாரங்கள்.

இது சம்பந்தமாக விநியோகஸ்தர்கள் தரப்பு விஜய் ஆண்டனி தரப்பை சந்தித்து பேசவுள்ளனர் என தகவல்.உண்மை தன்மை அறிந்து தன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை விஐய் ஆண்டனி தரப் போகிறாரா? இல்லை விவகாரமாக்க போகிறாரா?

நன்றி : Tamil Cinema Box Office.