திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜுன் 10 ம் தேதி நடைபெறுகிறது

0
426

திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் 

ஜுன் 10 ம் தேதி நடைபெறுகிறது 

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஜூன் 10 ம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையரும்,சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதியுமான கே.என்.பாஷா கூறியதாவது,..

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்துவது தொடர்பாக, சங்க உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கடந்த 7 ம் தேதி அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜூன் 10 ம் தேதி தேர்தலை நடத்துவது எனவும் அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை நடத்துவது எனவும், தேர்தலை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் நடத்துவது எனவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

மேலும் 21 ம் தேதி முதல் 25 ம் தேதிக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். 28 ம் தேதி மாலை 4 மணிக்குள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்ற உறுப்பினர்கள் புகைப் படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மொத்தம் 1560 உறுப்பினர்கள் உள்ளனர்.

ELECTION ANNOUNCEMENT FOR THE PERIOD 2015 – 2017

FROM THE ELECTION COMMISSIONER HON’BLE JUSTICE (Retd) K. N. BASHA

Sl. No. Name of the Post Sectors Number of Seats
 1 PRESIDENT Common for Film & Television Sectors)     1
 2 VICE-PRESIDENTS (Film Sector)     2
 3  TREASURER (Common for Film & Television Sectors)     1
4 SECRETARIES (Film Sector)     2
 5 VICE – PRESIDENT (Television Sector)     1
6 SECRETARY           (Television Sector)     1
7 E. C. MEMBERS (Film Sector)   10
 8 E. C. MEMBERS (Television Sector)     7

 ELECTION SCHEDULE

1.வேட்புமனு விண்ணப்பங்கள் 16.05.2018 முதல் வழங்கப்படும்

 நிர்வாகிகளுக்கு வைப்புத் தொகை ரூபாய் –  2000

செயற்குழு உறுப்பினர்களுக்கு வைப்புத் தொகை – 1000

  1. Filing of Nominations: 21.05.2018 to 25.05.2018
  2. Withdrawal of Nomination: 26.05.2018 to 28.05.2018 (till 4.00 P.M)
  3. Announcement of Final list of candidates: 28.05.2018 @ 5.00 P.M

 DETAILS OF ELECTION

 DATE OF ELECTION 10.06.2018 (SUNDAY)

  1. TIME OF ELECTION 08.00 A.M to 4.00 P.M
  2. VENUE KANDASAMY NAIDU COLLEGE, ANNA NAGAR (Near Round Tana) 

Results will be announced the same day