திருநள்ளாறில் நாளை இரும்பு சப்பரம் வெள்ளோட்டம்

0
848

திருநள்ளாறு கோயில் பிரம்மோத்ஸவத்தில் பயன்படுத்தப்படும் மரத்தாலான சப்பரத்தை இரும்பாக மாற்றப்பட்டு, இதற்கான வெள்ளோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரம்மோத்ஸவத்தில் தெருவடைச்சான் என்கிற மின்சார சப்பரப் படலில் தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் வீதியுலா நடைபெறும்.

மரத்தாலான சப்பரம் இயக்கப்படுவதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, இரும்பு சப்பரமாக மாற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனடிப்படையில் திருச்சி பெல் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்டு சக்கரம் மற்றும் சப்பரத்தின் மட்டம் தயார் செய்யப்பட்டு வந்து சேர்ந்தது. இவை பெல் நிறுவனப் பிரதிநிதிகளால் சப்பரம் ஒருங்கிணைப்பும் பணி நடந்துவருகிறது.

அடுத்த மாதம் (மே) பிரம்மோத்ஸவம் நடைபெறவுள்ளதையொட்டி இரும்பு சப்பர வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காலை 6 முதல் 6.45 மணிக்குள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வெள்ளோட்டம் நான்கு மாட வீதியில் நடத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.