சாகித்திய அகாதெமி அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையமும் (AMTI)

0
896

மொழிபெயர்ப்பு: நுணுக்கங்கங்களும் அறைகூவல்களும் கருத்தரங்கு

சாகித்திய அகாதெமியும், அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையமும் (AMTI) இணைந்து “மொழிபெயர்ப்பு: நுணுக்கங்கங்களும் அறைகூவல்களும்” எனும் ஒருநாள் உரையரங்கு 09.12.2015 புதன்கிழமைMCET கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள சுமார் 40 கல்லூரிகளிலிருந்து 250 மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

SA-2அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் தலைவரும், சக்தி குழும நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் ம. மாணிக்கம், அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய இயக்குநர் சிற்பி பாலசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் சி. இராமசாமி, சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் கி. நாச்சிமுத்து, உதவி ஆசிரியர் எஸ். ராஜ்மோகன், தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், புதிய தலைமுறை ஆசிரியர் மாலன், பேராசிரியர் க.செல்லப்பன் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் பேராசிரியர் தாரா கணேசன், கவிஞர் புவியரசு, பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், ஜி. குப்புசாமி முதலியோர் கலந்து கொண்டனர்.

SA-4 SA-5 SA-6 SA-3டாக்டர் ம. மாணிக்கம் தலைமையில்காலை 10.00மணி அளவில் தொடக்க விழா நடைபெற உள்ளது.எஸ். ராஜ்மோகன் வரவேற்புரை நல்கினர். கி. நாச்சிமுத்து மையக்கருத்துரை நல்கினர். மாணிக்கம் அவர்கள் பேசும்போது மொழி என்பது ஒரு கருவி என்றும், நகைச்சுவை இருக்கும் இடத்தில் தான் படைப்புத்திறன் இருக்கும் எனவும், சிந்தனை இல்லாமல் மொழி இல்லை என்றும் கூறினார். வாழ்வில் சிறந்த நபராக இருக்க, உங்கள் உள்ளே உள்ள ஆற்றலை கண்டறிதல் வேண்டும் எனவும் கூறினார். மாணவர்கள் சிறந்த மொழிபெயர்ப்புகள் செய்யும் பட்சத்தில் மையத்தின் மூலம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். நாச்சிமுத்து பேசும்போது மொழிபெயர்ப்பு யுக்தி, கோட்பாடு, வரலாறு, சிக்கல், ஆய்வு போன்றவற்றை வரையறுக்க வேண்டும். கல்வித் திட்டத்தில் மொழிபெயர்ப்பு சேர்க்கப்பட வேண்டும். மலையாளம் தமிழ் மொழிபெயர்ப்பு இருப்பதுபோல் தமிழ் மலையாளம் மொழிபெயர்ப்பு இல்லை. தருமாபீரம் தான் தமிழின் முதல் மொழிபெயர்ப்பு எனவும் கூறினார்.

SA-7மேலும் காலை “ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு” என்ற தலைப்பில் மாலன் தலைமையில் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் மற்றும் ஜி. குப்புசாமி அவர்கள் உரை நிகழ்த்தினர். ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசும்போது, மொழிபெயர்ப்பின் விதிகள் என்ன என்பதை வரையறுக்க வேண்டும் எனவும், படைப்பியலில் உயிரோட்டம் இருத்தல் அவசியம் எனவும், மொழிபெயர்ப்பாளர்களுக்குள் ஒரு படைப்பாளி இல்லையேல் வேண்டும். சார்லஸ் டிக்கன்ஸ், அருந்ததிராய், கிரின் சகோதரர்கள் போன்றோர்களின் நூல்களை மாணவர்கள் சிலவற்றை மொழிபெயர்க்கவேண்டும்.

ஜி. குப்புசாமி அவர்கள் பேசும்போது தாம் அருந்ததிராய் நூல்களை மொழிபெயர்த்துள்ளதாகத் தெரிவித்தார். ரஷ்ய எழுத்தாளர் நபகோ எழுதிய மொழிபெயர்ப்பு பற்றிய நூல் (Translation Theory)மொழிபெயர்ப்பு கலையை கற்றுக் கொள்ள உதவியதாகத் தெரிவித்தார். மேலும்மொழிபெயர்ப்பில் ஈடுபாடுள்ள அனைவரும் இதனை கட்டாயம் படிக்க வேண்டும் எனவும் கூறினார்.

மொழிபெயர்ப்பாளர்கள் செய்யும் தவறுகளாக, அறியாமையும், தவறான புரிதலும், புரியாத சொற்களை விட்டு விடுவது, மேலோட்டமாக எழுதி மூல நூலின் தரம் தாழ்த்தி விடுவது போன்றவை உள்ளதாகத் தெரிவித்தார். ஒரு நூலை மொழி பெயர்க்கும்போது மொழி மட்டுமே மாறுபட வேண்டும் எனவும், மூல நூலின் கலாச்சாரம் மாறக் கூடாது. மூல நூலில் உள்ளபடியே மொழிபெயர்ப்பு இருத்தல் அவசியம்.

மாலை “இந்திய மொழிகளுக்கிடையே மொழிபெயர்ப்பு” என்ற தலைப்பில் சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையில் தாரா கணேசன், கவிஞர் புவியரசு ஆகியோர் பேசினர். பிற்பகல் 3.00 மணி அளவில் நிறைவு விழா பேராசியர் க. செல்லப்பன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் சி. இராமசாமி நிறைவுரையில், பேராசிரியர் செந்தில் குமார் நன்றி கூற இனிதே நிறைவு பெற்றது.