கூடி நட, வெல்வது நானில்லை நாம்: டுவிட்டரில் கமல்ஹாசன் கருத்து

0
457

கூடி நட, வெல்வது நானில்லை நாம்: டுவிட்டரில் கமல்ஹாசன் கருத்து

நடிகர் கமல்ஹாசல் கடந்த இரண்டு மாதங்களாக தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு விதமான அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதில், தமிழகத்தில் ஊழல் குறித்து தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் கமல் ”விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே. ஓடி என்னைப்பின்தள்ளாதே களைத்தெனைத் தாமதிக்காதே, கூடி நட, வெல்வது நானில்லை நாம்” என்று தனது டுவிட்டரில் இன்று கருத்து பதிவிட்டுள்ளார்.

வழக்கம் போல் அவரது இந்த கருத்தும் எதனை நினைத்து பதிவிட்டுள்ளார் என்பது சற்றே புரியாததாக தான் இருந்தது. அந்த பதிவைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில், ”புரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு. தேசியமும் தான்” என்று மற்றொரு பதிவை வெளியிட்டார்.

முரசொலி நாளிதளின் 75-ஆம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் கமல் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.