ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரு தேசிய விருதுகள் அறிவிப்பு!

0
314

ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரு தேசிய விருதுகள் அறிவிப்பு!

65-வது திரைப்படத் தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இதில் சிறந்த தமிழ்ப் படமாக செழியன் இயக்கிய டூலெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.

அதேபோல சிறந்த மலையாளப் படமாக Thondimuthalum Driksakshiyum மற்றும் சிறந்த ஹிந்திப் படமாக நியூடன் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

காற்று வெளியிடை படத்தின் பாடல்களுக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தின் பின்னணி இசைக்காகவும் ரஹ்மானுக்கு மற்றொரு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தமுறை இரு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.