கடும் சோதனைகள் வருவது ஏன் …? கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …?

0
3771

 

*சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

*கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை இறை வழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.

*நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல.

*மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கஷ்டங்களை அனுபவிக்கும்போது, ஏன் எனக்கு, என்பவர்கள், அவர்கள் வளர்ச்சி யடைகையில், எனக்கு ஏன் இந்த வளர்ச்சி, என்று கேட்பதேயில்லை … !

*எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்பவர்கள், என்றாவது எனக்கு மட்டும் ஏன்,

*இந்த மாருதி கார்,ஹீரோ ஹோண்டா பைக், சாம்சங் கலக்ஸி மொபைல், லேப் டாப்,ஐ.டி கம்பனி வேலை, வங்கியில் பணம் ,வீடு, நகை, வெளிநாட்டுப் பயணம், என்று கேட்டதுண்டா .. ?

*வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது,

*தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.

*நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள், ஆனால் வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள் அவர்களை சிறப்பிக்குமே தவிற கசப்பிக்காது.

*ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.அதே போல பிறந்த தேதியிலி ருந்து இறுதிவரை சந்தோஷத் துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.

*கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்த வர்களுக்கு, ஆண்டவன் ஒரு நாள் உதவாமற் போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று, யாரையும் ஆண்டவன் அப்படியே விட்டுவிட மட்டான்.

*விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் பாடங்களே போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன வலிமை வரும். சோதனைகள் என்பது மனோதி டத்தை அதிகரிக்க உதவும்

*சில சமயங்களில், அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளை களில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார்.

*அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயி ருக்கின்றன.
எனவே, நற் சிந்தனையுடன், அவரது நாமமே ஜபித்து, அவரை வணங்கி, அவரிடம் சரண் அடைந்தால், நாம் நமது சோதனைகளையு ம், கர்ம வினைகளையும், பயமின்றி கடந்து சாதனையாக்கலாம்.

*உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம் இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும் தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.

*கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்…

*நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகுங்கள்….

*வருங்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்….

*கிடைக்காததையும் தவறவிட்டதையும் நினைத்துத் தளராதீர்கள்…

*பயத்தைக் களைந்து நம்பிக்கையை தக்க வையுங்கள்…

*சந்தேகங்களை நம்பாதீர்கள்
நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள்.

*உங்களுக்கு கிடைத்த வரங்களை எண்ணில் கொள்ளுங்கள்.

*கடவுளை நம்புங்கள் அவர் நல்லவர்களைக் கை விட மாட்டார்…!

✡ ஒம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்