ரவுடியை பந்தாடிய விஜய் – வைரலாகும் வீடியோ

0
156

ரவுடியை பந்தாடிய விஜய் – வைரலாகும் வீடியோ

‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது.

தொடர்ந்து மூன்று வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருப்பதாக முன்னதாக தகவல் வெளியான நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் விஜய் ஒருவரை தூக்கி அடிப்பது போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

இந்த படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக தெலுங்கு திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம் மற்றும் லக்‌ஷ்மண் பணியாற்றி வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் ரசிகர்களிடையே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் வருகிற தீபாவளி ஸ்பெஷலாக ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.