“டீ கடை ராஜா” 

0
1036
இத்திரைபடத்தை FUNTOON TALKIES PRODUCTION சார்பில் முருகராஜா  என்பவர் தயாரித்திருக்கிறார், இப்படத்தில் ராஜா சுப்பையா இயக்குனர் மற்றும் நாயகனாகவும்,   நேகா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள், இவர்களோடு யோகி பாபு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி வரும் இத்திரைப்படம் இறுதி கட்ட பணிகளில் உள்ளது. 
இத்திரைபடத்தை பற்றி இயக்குனர் ராஜா சுப்பையா கூறியதாவது 
இத்திரைப்படம் காதல் கலந்த “ப்ளாக் காமெடி” வகையைச் சேர்ந்தது, மிகவும் SIMPLE ஆன ஒரு லவ் ஸ்டோரி-ஐ நேடிவிடி மாறாமல் எதார்த்தமாக படமாக்கி உள்ளேன்.
 
என்படத்தின் கதாநாயகி நேகா கதாபாத்திரத்தோடு மகிவும் ஒன்றி நடித்துள்ளார் அத்தோடு இல்லாமல் அவர் பார்ப்பதற்கு நயன்தாராவின் தங்கை போல் இருப்பதால் இவரை நான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தேன். இவர் தமிழ்த்திரை உலகில் ஒரு பெரிய ரவுண்டு வருவார்
 
அதே போல் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்த “யோகி பாபு” அவர்கள் முழு நேர காமெடியனாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் மற்றபடி அனைத்து கதாபத்திரங்களிலும் புதுமுகங்களே நடித்துள்ளனர்.
 
நான் அடுத்த படத்திற்கான கதையும் தயார் செய்து ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் கூறியபோது அவர் அந்த கதையை ஒப்புக்கொண்டது மட்டுமில்லாமல் இப்படத்தை வாங்கி வெளியிடவும் சம்மதித்துள்ளார். 
 
பிப்ரவரி 14 அன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அந்நிறுவனம் இதனை அறிவிக்கபோவதாக கூறியுள்ளது.  தனது முதல் படமே மிகப்பெரிய ஒரு நிறுவனத்தால் கவனிக்கப் பட்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒரு தருணத்திற்காக தான் பத்து வருடமாக சினிமாவில் போராடினேன். இப்படத்தில் குறிப்பாக “இண்டர்வல் ப்ளாக்” மற்றும் “கிளைமாக்ஸ்” அதிகம் பேசப்படும், நான் எப்போதும் நம் தமிழ் மக்கள் வாழ்வியல் சார்ந்த கதையையே அதன் எதார்த்தம் மாறாமல் படம் எடுப்பேன், மேலும் கொரியன், ஹாலிவுட் பட  DVD யும்  பார்ப்பதில்லை என்கிறார் இயக்குனர்.
இப்படத்திற்கு இசை தன்ராஜ் மாணிக்கம், ஒளிப்பதிவு இளன் , படத்தொகுப்பு முத்துராஜ்.