சிற்பியின் மகன் நந்தன்ராம் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தை பாராட்டிய கமல்ஹாசன்

0
206

சிற்பியின் மகன் நந்தன்ராம் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிப்பருவத்திலே’  படத்தை பாராட்டிய கமல்ஹாசன்

வி.கே.பி.டி கிரியே‌ஷன்ஸ் சார்பாக தயாராகி இருக்கும் படம் ‘பள்ளிப்பருவத்திலே’.

இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ், தம்பி ராமையா, கஞ்சாகருப்பு, பொன் வண்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப் பதிவு – வினோத் குமார், இசை – விஜய் நாராயணன், பாடல்கள் – வைரமுத்து, வாசுகோகிலா, எம்.ஜி.சாரதா, தயாரிப்பு – டி.வேலு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வாசுதேவ் பாஸ்கர்.

படம் பற்றி கூறிய இயக்குனர்….

“இது பள்ளி மாணவர்களையும், கலகலப்பான குடும்ப சூழலையும் மையப்படுத்தி அமைக்கப்பட்ட, காமெடி கலந்த காதல்கதை. இதில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நாயகனின் அப்பாவாகவும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும் நடிக்கிறார். ஊர்வசி குடும்பத் தலைவியாக சிறப்பாக நடித்து இருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் உருவாகி இருக்கிறது.

இதில் நடித்த ரவிகுமார் தனக்கு சிறப்பான பாத்திரம் என்பதால், பேசியதை விட குறைவான சம்பளமே வாங்கினார். கமல்ஹாசன் இந்த படத்தை மனம் திறந்து பாராட்டினார். ஏ.ஆர். ரகுமான், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் பாராட்டினார்கள். பாரதிராஜா, இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறினார். இந்த பாராட்டுகள் ‘பள்ளிப்பருவத்திலே படத்துக்கு பெருமை சேர்த்து இருக்கிறது” என்றார்.

ALSO SEE:

palli paruvathile