சங்கமித்ரா எப்போது உருவாகும்: சுந்தர்.சி விளக்கம்

0
256

சங்கமித்ரா எப்போது உருவாகும்: சுந்தர்.சி விளக்கம்

‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு இயக்குநராக சுந்தர்.சி கைவசம் ‘சங்கமித்ரா’ மற்றும் ‘கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘கலகலப்பு 2’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சுந்தர்.சி “அடுத்ததாக ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

வரலாறு மற்றும் சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ‘தோனி’ பட புகழ் தீஷா பதானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார், சுபா வசனம் எழுதுகின்றனர், திரு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

ஏற்கெனவே, படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு (2017) ‘கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் படத்தின் அறிமுக விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.