எனக்கு திரையரங்கங்களிலிருந்து எந்த லாபமும் வரவில்லை: கலகலப்பு 2 பற்றி விஷாலிடம் சொல்லி வருத்தப்பட்ட சுந்தர்.சி

0
462

எனக்கு திரையரங்கங்களிலிருந்து எந்த லாபமும் வரவில்லை: கலகலப்பு 2 பற்றி விஷாலிடம் சொல்லி வருத்தப்பட்ட சுந்தர்.சி

சமீபத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் ‘கலகலப்பு 2’. இந்த படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நந்திதா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். சதீஷ், ரோபோ ஷங்கர், மனோ பாலா, விடிவி கணேஷ், வையாபுரி, சந்தான பாரதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.

சுந்தர்.சியின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். இப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் பட அதிபர்கள் நடத்திவரும் ஸ்டிரைக் காரணமாக புதுப்படங்கள் வெளியாகாததால், தொடர்ந்து 8 வாரத்திற்கும் மேலாக இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் எட்டு வாரத்திற்கு மேல் ஓடிய மாபெரும் வெற்றி பெற்ற கலகலப்பு 2 படத்தில் எனக்கு திரையரங்கங்களிலிருந்து எந்த லாபமும் வரவில்லை என்றும், வெறும் கணக்கு பேப்பர் மட்டுமே கொடுத்தார்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்.சி விஷாலிடம் சொல்லி வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.