அப்பா மற்றும் காதலருடன் ஆதவ் கண்ணாதாசன் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன்

0
365

அப்பா மற்றும் காதலருடன் ஆதவ் கண்ணாதாசன் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன்

ஆதவ் கண்ணாதாசன் திருமணத்தில் அப்பா கமல்ஹாசன், காதலர் மைக்கேல் கோர்சலுடன் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசனுக்கு ஆரம்பகட்ட படங்கள் கைகொடுக்காதபோதிலும் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார். தற்போது கமலின் சபாஷ் நாயுடு படத்திலும், மற்றொரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் ஸ்ருதிக்கும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலுக்கும் நெருக்கமான நட்பு மலர்ந்தது. இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார் ஸ்ருதி.

சில மாதங்களுக்கு முன் தந்தை கமல்ஹாசனுக்கு மைக்கேல் கோர்சலை அறிமுகப்படுத்திய ஸ்ருதி தற்போது அவரை தாய் சரிகாவுக்கும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இந்நிலையில் ஆதவ் கண்ணாதாசன் – வினோதினி திருமணத்தில் அப்பா கமல்ஹாசன், காதலர் மைக்கேல் கோர்சலுடன் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். மைக்கேல் கோர்சல் வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டார்.